Site icon Tamil News

பிளஸ் 1 பொதுத்தேர்வு – தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்டம்

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16,484 ஆண்கள், 19,144 பெண்கள் என மொத்தம் 35,628 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 15,546 ஆண்கள், 18,664 பெண்கள் என மொத்தம் 34,210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது 94.31% ஆண்கள், 97.49 சதவீத பெண்கள் என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.02 சதவீதமாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

Exit mobile version