Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் விபத்துக்குள்ளான விமானம் – ஐவர் பலி – பலர் காயம்

போலந்துத் தலைநகர் வார்சாவுக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய விமானத் திடலுக்கு அருகே விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது அது மோதியது.

சம்பவத்தின்போது விமானத்தில் 3 பேர் இருந்தனர். புயலிலிருந்து தப்பிக்க சுமார் 13 பேர் அந்த இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமுற்றனர். இருவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என வார்சா பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் விமானியும் ஒருவர் என்று அந்தப் பேச்சாளர் கூறினார். விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version