Site icon Tamil News

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம் : 06 பேர் பலி!

கனடாவில் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில்  06 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியது.

குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மீட்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version