Site icon Tamil News

ஜப்பானின் ஹனேடே விமான நிலையத்தில் தீப்பிடித்த விமானம்! (வீடியோ இணைப்பு)

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருக்கும் போது ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

சப்போரோவில் இருந்து புறப்பட்ட விமானம், கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி NHK தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேத விபரங்களை மதிப்பிடுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

https://youtu.be/9kZfoQbT8lU

Exit mobile version