Site icon Tamil News

மனிதக் கண்ணுக்கு இணையான தொலைபேசி கமரா – Samsung நிறுவனத்தின் புதிய முயற்சி

Samsung நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்களில் 432 மெகா பிக்சல் கொண்ட அதிநவீன கேமராக்களை பொறுத்த அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.

தொலைத் தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்ற நிறுவனமான Samsung. தனது சந்தை மதிப்பை உயர்த்த தொடர்ந்து பல்வேறு புதுமைகளை தொலைத்தொடர்பு சாதனங்களில் புகுத்தி வருகிறது. குறிப்பாக ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு மாற்றாக Samsung நிறுவனமும் தன்னுடைய பயனாளர்களுக்கு உயரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அளிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறது.

இந்த நிலையில் Samsung நிறுவனம் தன்னுடைய கேலக்ஸி மாடல் மொபைல் போன்களின் தரத்தை பன்மடங்கு உயர்த்த முடிவு செய்து இருக்கிறது. இதன் கூடுதல் முக்கியத்துவம் என்னவென்றால் மனித கண்களின் விளித்திரையோடு போட்டி போடும் அளவிற்கு மொபைல் போன் கேமராக்களில் ரெசல்யூஷனை உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Samsung நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 25 மாடல் 2025 ஆம் ஆண்டும், Samsung கேலக்ஸி எஸ் 26 மாடல் 2026 ஆம் ஆண்டும் வெளியாக உள்ளது. இந்த மாடல்களில் 432 மெகா பிக்சல் சென்சார் கேமராக்களை இந்நிறுவனம் பொருத்த முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் எடுக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள் தத்துரூபமாக மனிதக் கண்கள் காட்சிப்படுத்துவதற்கு நிகரான அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கேமராக்களில் டி எஸ் எல் ஆர் மற்றும் ஹன்டிகேம் தரத்தையும் இந்நிறுவனம் பொருத்த முயற்சித்து வருகிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் மொபைல் போன்களில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த கேமரா கொண்ட மொபைல் போனாக இவைகள் கருதப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் இந்த மொபைல் போன்கள் ஒன்றரை லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை அறிமுக விலையாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version