Site icon Tamil News

காலி கடற்பகுதியில் இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

இலங்கையின் காலி கடற்பகுதியில் இந்தோனேசிய மீன்பிடிக்கப்பல் மேற்கொண்டதாக சந்தேகப்படும் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இலங்கை மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெயர் வெளியிடப்படாத இந்த மீனவர், ஐவர் கொண்ட தனது குழுவுடன், ஜூன் 22ஆம் திகதி பல நாள் மீன்பிடி இழுவை படகில் கடலுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் பயணித்த படகு வெளிநாட்டுக் கப்பலுடன் மோதியுள்ளது.

இதனை தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பலில் இருந்தவர்கள், இலங்கை இழுவை படகு மீது பெற்றோல் குண்டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், மீனவர் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Exit mobile version