Site icon Tamil News

ஜெர்மனியில் குழந்தை பெறுவதனை தவிர்க்கும் மக்கள் – வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனியில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுடைய எண்ணிக்கையானது 156270 ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது குழந்தைகளின் பிறப்பு விகிதமானது 5 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளாக தெரியவந்து இருக்கின்றது.

இதேவேளையில் 2021 ஆம் ஆண்டுடன் 2023 ஐ ஒப்பிடும் பொழுது குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் 10.9 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நோற்றின்பிஸ்பாலின் மாநில புள்ளி விபரம் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றது.

இந்நிலையில் குறிப்பாக டுசில்டோ நகரத்தில் குழந்தைகளின் பிறப்புகளின் வீழ்ச்சி 11.4 சதவீதமாக உள்ளதாகவும், வுபேற்றான் நகரத்தில் குழந்தைகளின் பிறப்புகளின் வீழ்ச்சி 11. 5 சதவீதமாக உள்ளதாகவும், டுஷ்பேர்க் நகரத்தில் குழந்தைகளின் பிறப்பில் ஏற்றம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version