Site icon Tamil News

பிரித்தானியாவில் உடல் பருமனால் போராடும் மக்கள்! பிரதமரின் அதிரடி நடவடிக்கை

பிரித்தானியாவில் உடல்பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி இந்த விடயம் தெரிவித்துள்ளது.

இதனால், அதிக நோயாளிகளை சமாளிக்க முடியாமல் தேசிய சுகாதார சேவை அமைப்பு தடுமாறுகிறது.

இந்நிலையில் உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு வெளியேயும் வழங்கும் வகையில் 2 ஆண்டு சோதனை திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.

40மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ந்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், “உடல் பருமன் தேசிய சுகாதார சேவை மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறது.

உடல் எடையை குறைக்க மக்களுக்கு உதவும் வகையில் சமீபத்திய மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக, உடல் பருமனால் ஏற்படும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்த்து மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவ முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version