Site icon Tamil News

நேட்டோ வரலாற்றில் மிகப் பெரிய விமான பயிற்சிக்கு தயாராகும் ஜெர்மனி!

நேட்டோவின் வரலாற்றில் மிகப்பெரிய விமான பயிற்சியை நடத்த ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தொடங்கும் ஏர் டிஃபென்டர் 23 பயிற்சியில் 10,000 பங்கேற்பாளர்கள் மற்றும் 25 நாடுகளைச் சேர்ந்த 250 விமானங்கள்  பங்கேற்கவுள்ளன.

நேட்டோ உறுப்பு நாடு மீதான உருவகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 12-23 வரை நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க மட்டும் சுமார் 2000 விமான காவலர்களையும், 100 விமானங்களையும் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

“இது ஒரு பயிற்சியாகும், இது பார்க்கும் எவருக்கும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், என  ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் ஏமி குட்மேன் கூறினார்.

Exit mobile version