Site icon Tamil News

52 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் வாழும் மக்கள் : உலகின் வெப்பமான நகரம் இதுதான்!

உலகின் வெப்பமான நகரத்திற்கான வானிலை வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த படம் அங்கு மக்கள்  வாழமுடியாத அளவிற்கு மாறியுள்ளமைக்கான காரணத்தை காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோடையில் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றன என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல என்றுதான் தோன்றும்.

ஆம் மத்திய கிழக்கில் உள்ள குவைத் நகரத்தில் கோடை வெப்பம் 52C ஆக பதிவாகியுள்ளது. அங்கு மக்கள் வாழ முடியாத நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உலகின் மூன்றாவது முறையாக பதிவாகிய  அதிகபட்ச வெப்பநிலையாகும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில், பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் இப்போது உட்புறத் தெருக்களில் ஆண்டு முழுவதும் ஏர்-கான்ஸை பயன்படுத்துகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் நகரின் வெப்பநிலை 5.5C வரை உயரும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மழை குறைந்து, புழுதி புயல்கள் அதிகரித்து வருகின்றன. வானத்திலிருந்து பறவைகள் செத்து விழுந்ததாகவும், கடல் குதிரைகள் வளைகுடாவில் கொதித்து இறந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version