Site icon Tamil News

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பணிப்புரைக்கு அமைய, அந்நாட்டு ஜனாதிபதி நேற்று (09.08)  கலைக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருட பாராளுமன்ற பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு பாராளுமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஆனால் அரசியல் நெருக்கடிகள் நீடிக்கும் இந்த காலப்பகுதியில் தேர்தல்கள் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்நாட்டு தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும்,  நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தி புதிய அரசு அமைக்கப்படும் வரை காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version