Site icon Tamil News

சீனாவில் தனது ஊழியர்களுக்கு 10 ஆயிரம் யுவான்களை ஐந்து வருடத்திற்கு இலவசமாக வழங்கும் பிரபல நிறுவனம்!

சீனாவில் பெற்றோர் பண உதவித்தொகையாக 10 ஆயிரம் யுவான்களை வழங்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி  சீனாவின் Trip.com குழுமம், ஜூலை 1 முதல் இந்த திட்டத்தை வழங்க தீர்மானித்துள்ளது.

சீனாவில் உள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனம் முன்னெடுத்துள்ள முதல் முயற்சி இதுவாகும்.

குறித்த நிறுவனமானது 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனமாகும்.

குறித்த நிறுவனத்தில் பணியாறும்  ஊழியர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்தாண்டுகளுக்கு 10,000 யுவானை வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்று அது கூறியது.

Exit mobile version