Site icon Tamil News

இனி 2 மணி நேரம் மட்டுமே – சீனாவில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு

சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு, சிறுவர்கள் கைடக்க தொலைபேசிக்கு செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளது.

அத்தோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கையடக்க தொலைபேசி சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

16 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும், 8 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். 8 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புதிய விதிகள் அவசியம் என்று சிஏசி தெரிவித்துள்ளது. அதிகப்படியான நேரம் கையடக்க தொலைபேசி பார்ப்பது உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இந்த சமீபத்திய கட்டுப்பாடுகள், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் கேம் நிறுவனமான டென்சென்ட் மற்றும் பிரபலமான ஷார்ட்-வீடியோ பிளாட்ஃபார்ம் டூயினை இயக்கும் பைட் டான்ஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கும் என்று செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version