Site icon Tamil News

விபத்து குறித்து ஆராய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் தாய் கப்பலை ஆய்வு செய்யும் அதிகாரிகள்!

டைட்டன்  நீர்மூழ்கிக் கப்பலுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய விசாரணை அதிகாரிகள் அதன் தாய்க் கப்பலில் இருந்து குரல் பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டன் கப்பலின்  தாய்க் கப்பலான போலார் பிரின்ஸின் குரல் பதிவுகள் மற்றும் பிற தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தச் சம்பவம் கிரிமினல் முறையில் நடந்ததா என்பதையும் கண்டறியவும் முயற்சிப்பார்கள் என கூறப்படுகிறது.

இதன்படி கடனாவின்   போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் புலனாய்வாளர்கள், ஜூன் 24, சனிக்கிழமையன்று போலார் பிரின்ஸ்க்கு விஜயம் செய்தனர்.

இதன்போது “கப்பலின் பயணத் தரவு ரெக்கார்டர் மற்றும் பயனுள்ள தகவல்களைக் கொண்ட பிற கப்பல் அமைப்புகளிலிருந்து அவர்கள் தகவல்களைச் சேகரித்ததாக கூறப்படுகிறது.

“விசாரணையின் நோக்கம் யாரையும் குற்றம் சாட்டுவது அல்ல, ஆனால் குரல் பதிவுகள் “எங்கள் விசாரணையில் பயனுள்ளதாக இருக்கும்” என்று அதிகாரிளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version