Site icon Tamil News

ஈரான் செல்லும் வடகொரியாவின் உயர்மட்ட குழுவினர் : அமெரிக்காவை எதிர்கொள்ளும் நாடுகளை கட்டியெழுப்பு திட்டம்!

உயர்மட்ட வட கொரியப் பொருளாதாரக் குழு ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தது என்று வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளின் முதல் அறியப்பட்ட பேச்சுவார்த்தை இது எனக் கூறப்படுகிறது.

“புதிய பனிப்போர்” என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை எதிர்கொள்ளும் நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப முனைகிறார்.

காரணம் அவரது தீவிரமான ஆயுத சோதனைகள் அமெரிக்காவையும் தென் கொரியாவையும் தங்கள் இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தத் தூண்டியது.

வட கொரியாவின் வெளிநாட்டுப் பொருளாதார உறவுகளின் அமைச்சரான யுன் ஜங் ஹோ தலைமையிலான பியோங்யாங்கின் பிரதிநிதிகள் ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version