Site icon Tamil News

அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்த தயாராகும் வடகொரியா

வடகொரியாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்தப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் பியோங்யாங் (Pyongyang) வட்டாரத்தில் அமெரிக்கா,
ராணுவப் பதற்றங்களைத் தூண்டுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனால், அணுவாயுதப் பூசல் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்திற்கு அருகே உள்ள நீர்ப்பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்காவின் முடிவுக்கும் வட கொரியா கண்டனம் தெரிவித்தது.

அணுச்சக்தியால் இயங்கும் USS Michigan கப்பல் புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சக்கூடியது.

அது கடந்த மாதம் தென் கொரியக் கடற்படைத் துறைமுகத்தைச் சென்றடைந்தது. வடகொரியாவுக்கும் அந்த வட்டார நாடுகளுக்கும் எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை அது என்று பியோங்யாங் கூறியது.

அந்நடவடிக்கை அமைதிக்குப் பெரும் மிரட்டலை விடுப்பதாக அது கூறியது.

 

Exit mobile version