Site icon Tamil News

நீருக்கடியில் அணுசக்தி கப்பல் சோதனையை மேற்கொண்ட வடகொரியா!

வட கொரியா தனது முதல் செயல்பாட்டு “தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை இன்று (08.09) ஏவி சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு, ஹீரோ கிம் குன் ஓகே என வடகொரியா பெயர் சூட்டியுள்ளது.  நீருக்கடியில் தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இது முக்கிய பங்களிப்பு என வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்த கப்பலை 1970 ஆம் ஆண்டு  சீனாவிடமிருந்து வட கொரியா கொள்வனவு செய்திருந்தது. இந்நிலையில் சோதனைகள் நிறைவடைந்த பின்னர், கடற்படைக்கு கையளிக்கும் நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள கிம் ஜோங் உன்,  கடற்படைக்கு அணு ஆயுதங்களை வழங்குவது அவசரமான பணி என்று கூறினார்.

Exit mobile version