Site icon Tamil News

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் ஜப்பான் : நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலம் ஒன்றுக்கு அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று (09) அங்கீகாரம் அளித்துள்ளது.

இதுவரை புலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எத்தனை தடவைகள் மேன்முறையீடு செய்தாலும்,  தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை ஜப்பானில் தங்கியிருக்க முடியும்.

ஆனால் புதிய சட்டத்தின்படி  3 தடவைகள் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்பட முடியும்.

ஜப்பானின் எதிர்க்கட்சியினரும் மனித உரிமை குழுக்களும் இச்சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் ஜப்பானிய பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இச்சட்டமூலத்தை அங்கீகரித்தது.

இச்சட்டமானது  பாதுகாக்கப்பட வேண்டியவர்களை பாதுகாப்பதுடன்இவிதிகளை மீறுபவர்களை கண்டிப்புடன் கையாளும் என ஜப்பானிய நீதியமைச்சர் கென் சைட்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version