Tamil News

நைஜீரியா:கலவரத்தை அடக்கச் சென்ற ராணுவ அதிகாரிகள் உட்பட 16 வீரர்கள் படுகொலை!

நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடக்கச் சென்ற அதிகாரிகள் நான்கு பேர் உட்பட 16 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் ஒகுவாமா மற்றும் ஒகோலோபா சமூகத்தினருக்கு இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த இரு வேறு சமூகத்தினருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக வாடிக்கையாக இருக்கிறது. அப்படி நேற்று தெற்கு நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரிடர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த கலவரக்காரர்கள் மோதலை தடுக்க வந்த வீரர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரக்காரர்கள்

இதுதொடர்பாக பாதுகாப்பு தலைமையக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துகுர் குசாவ் கூறுகையில், “எண்ணெய் வளம் மிக்க, ஆற்றங்கரை டெல்டா மாநிலத்தில் வியாழன் அன்று போமாடி கவுன்சில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், அமைதியை காக்க அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள், சில சமூக இளைஞர்களால் சூழப்பட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஒரு கட்டளை அதிகாரி, இரண்டு மேஜர்கள், ஒரு கேப்டன் மற்றும் 12 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார். இந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version