Tamil News

ரஷ்யக் கடற்படை தின அணிவகுப்பில் கலந்துகொண்ட புடின்! அங்கு நடந்தது என்ன?

ரஷ்யாவில் நடைபெற்ற அந்நாட்டின் 327-வது கடற்படை தின கொண்டாட்டத்தில் அதிபர் புடின் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

செயிண்ட் பீட்டர்ஸ்-பர்க் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், போர்க் கப்பல்களில் நின்றபடி வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

கடற்கரையில், பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு, வானில் குண்டுமழை பொழிந்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது.

பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய புடின், யுத்த காலத்தில் திறமையாக செயல்பட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார். பிறகு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

வீரர்கள் முன் உரையாற்றிய அதிபர் புடின், “இன்று, ரஷ்யா நமது தேசிய கடல்சார் கொள்கையின் பெரிய அளவிலான பணிகளை நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது, மேலும் நமது கடற்படையின் வலிமையை தொடர்ந்து வளர்த்து வருகிறது” என்று புடின் கூறினார்.

Exit mobile version