Site icon Tamil News

140 ஆண்டுகளில் நியூயோர்க்கில் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அதிர வைத்துள்ளது.

அதில் எவரும் காயமடையவில்லை என்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நியூயோர்க், நியூ ஜெர்ஸி, பென்சில்வேனியா, கனெட்டிகட் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் அவர்களது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 140 ஆண்டுகளில் நியூயார்க்கில் ஏற்பட்ட ஆகக் கடுமையான நிலநடுக்கம் அது என்று வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

 

Exit mobile version