Tamil News

தளபதி 68 படத்தின் புதிய அப்டேட் ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படம் அக்டோபர் 19ம் திகதி திரைக்கு வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version