Site icon Tamil News

ஜெர்மனியில் அமுலுக்கு வரும் புதிய சட்டம் – மீறினால் அபராதம்

ஜெர்மனியில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த வீட்டு கழிவுகளை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை மீறுகின்றவர்கள் 2500 யூரோ வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டு கழிவு பொருட்களை அகற்றுகின்ற விடயத்தில் செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காக புதிய சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய சட்டம் அடுத்த வருடம் 5ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.

அதற்கமை, உயிரியல் கழிவுகளை அகற்றும் பொழுது அதற்காக ஒதுக்கப்பட்ட கொல்கலன்களில் போட வேண்டும்.

இந்நிலையில் உயிரியல் கழிவுகளுடன் வேறு பொருட்களை குறித்த கொல்கலனில் போட்டால் கழிவு பொருட்கள் அகற்றுகின்ற நிறுவனத்தினால் எடுத்து செல்ல முடியாது.

மேலும் உயிரியல் கழிவுகளுடன் இரும்பு தொடர்புடைய கழிவுகளை போட்டால் 2500 யூரோக்களை அபராதமாக செலுத்த வேண்டும் என்று புதிய சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த புதிய விதிமுறையானது அதிவிரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version