Site icon Tamil News

இலங்கை : தேர்தல் திருத்த சட்டமூலங்களை பரிசீலிக்க புதிய குழு நியமனம்!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை பரிசீலிப்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சபாநாயகர் இன்று (21.08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” என்ற சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி 113(2),  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டவாக்க நிலைக்குழுவிற்கு மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி (டாக்டர்) சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, ஜானக வக்கம்புர, சாமர சம்பத் தசநாயக்க, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, மனோ கணேசன், இரான் விக்கிரமரத்ன மற்றும் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் ஆவர்.

அத்துடன், “பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 113(2)இன் பிரகாரம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டவாக்க நிலைக்குழுவிற்கு மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

பவித்ராதேவி வன்னியாராச்சி, காஞ்சன விஜேசேகர, பிரமித பண்டார தென்னகோன், ரோஹன திஸாநாயக்க, அனுராத ஜயரத்ன, சந்திம வீரக்கொடி, மனோ கணேசன் மற்றும் இரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

Exit mobile version