Site icon Tamil News

தமிழ் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை!! ஜனாதிபதி

13வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து தமிழ் கட்சி எம்பிக்களுடன் மாத்திரம் கலந்துரையாடினால் போதாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13வது அரசியலமைப்பு திருத்தம் முழு நாட்டையும் பிரதிபலிக்கும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடுவதே தமது நிலைப்பாடாகும் என தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையில் அழைக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை நீடிக்க வேண்டுமானால் தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

Exit mobile version