Site icon Tamil News

2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம்

உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வில், antimicrobial resistance நோய் காரணமாக 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இதை உலக பொது சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்த நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2025 முதல் 2050 வரை, உலகளவில் 39 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நேரடியாக antimicrobial resistance நோய் காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவதால் இந்த நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மெல்போர்னின் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் நோய்த்தடுப்பு மருத்துவத்தில் சுகாதார நிபுணரான பேராசிரியர் ராஜாராமன் எரி, இந்த நோயின் வளர்ச்சி பல தசாப்தங்களாக மருத்துவ முன்னேற்றத்தின் தலைகீழாக இருக்கலாம் என்றார்

Exit mobile version