Site icon Tamil News

பூமியில் விழப்போகும் 20 செயற்கைக்கோள்கள் – ஆபத்தை தடுக்க முயற்சி

20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழ இருப்பதாக எலான் மஸ்க்சின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து பால்கான் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்களே இவ்வாறு விழப்போவதாக குறிப்பிடப்படுகின்றது.

விண்ணில் நிலைநிறுத்தப்பட வேண்டிய சுற்றுவட்டப் பாதையைவிட குறைந்த உயரத்தில், தவறாக ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் பிரிந்ததாகவும் அவற்றில் 10 செயற்கைக்கோள்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உயரத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் சமூகவலைத்தளத்தில் ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் செயற்கைக்கோள்கள் விழும்போது விண்ணில் உள்ள மற்ற செயற்கைக்கோள்கள் பாதிக்காதவாறு கட்டுப்படுத்தப்படுவதாகவும் பூமியில் விழ இருக்கும் செயற்கைக்கோள்களால் உயிர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாது என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 

Exit mobile version