Site icon Tamil News

உதட்டின் நிறத்தை மாற்ற கூடிய இயற்கையான பொருட்கள்!

Woman applying deep red lipstick on the lips. Close up view of beauty and fashion concept

கறுத்து போன உதட்டிற்கு இந்த இரண்டு சொட்டு போதும், அழகான பிங் நிறத்திற்கு உதடு மாறும்.

முகத்திற்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை உதட்டிற்கு நாம் கொடுப்பதில்லை. வெயிலில் சென்று வந்தால் முகம், கழுத்து கறுத்து போனதாக இருக்கும். அதனை நீக்க பல்வேறு முறைகளில் மாஸ்க் செய்து போட்டு மாற்றி விடுவோம். ஆனால் வெயில் தாக்கத்தால் முகத்தில் உள்ள உதடு கறுப்பாக தோற்றமளிப்பது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு இதனை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என்று தெரியாமல் கூட இருப்பார்கள்.

இதற்காக செயற்கையான லிப்ஸ்டிக்கை உதட்டிற்கு போட்டுக் கொள்வார்கள். இப்படி அடிக்கடி நாம் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் உதடு வறட்சியாக இருக்குமே தவிர, இயற்கையான அழகான நிறத்திற்கு மாறாது. லிப்ஸ்டிக் அதிகமாக போடுவதனால் வெளிப்பார்வைக்கு பார்க்க அழகான நிறமாக தெரியும். ஆனால், காலப்போக்கில் அது உதட்டை கெடுத்து விடும். எளிமையாக உதட்டை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றுவதற்கு என்ன செய்வது என்பதை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக உதட்டிற்கு வறட்சியற்ற தன்மை அவசியம். அதனால் அதனை ஈரப்பதம் இருக்கும்படி நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக அடிக்கடி எச்சில் படுவது போல செய்யக்கூடாது. இதற்கு பதிலாக நாம் ஏதாவது எண்ணெய் அல்லது லிப் பாம் பயன்படுத்தலாம். இயற்கையாகவே பிங்க் நிறத்திற்கு உதடு மாறுவதற்கு இந்த எண்ணெயை தினமும் இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்: காய்ந்த ரோஜா இதழ்கள் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், கிளிசரின் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ந்த ரோஜா இதழ்களை போட்டு அதில் தேங்காய் எண்ணெயை தேவையான அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். இதனை வெயில் படும் இடத்தில் ஒரு நாள் முழுக்க வைத்து விடுங்கள். மறுநாள் எடுத்து ரோஜா இதழ்களை நன்கு வடிகட்டி விட்டு எண்ணையை மட்டும் வேறு ஒரு சிறிய மூடி உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதில் கிளிசரின் மற்றும் தேன் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் நாம் தினமும் பயன்படுத்த வேண்டிய லோஷன்.

இதில் தினமும் காலை, மாலை என இரண்டு வேலைகளில் உங்கள் உதட்டிற்கு தேவையான அளவு எடுத்து தடவிக் கொள்ளுங்கள். இரண்டே நாட்களில் வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் தயாரித்து வைத்துள்ள லோஷன் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது. அதனால் தொடர்ந்து இதனை உதட்டிற்கு பயன்படுத்தி வாருங்கள். இயற்கையாகவே உங்களது உதடு இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

Exit mobile version