Site icon Tamil News

பிரான்சில் நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம்

பிரான்சில் உள்ள பல தொழில்சங்கங்கள் கூட்டாக நாளை 13/10/2023 நாடுதழுவிய வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதனால் நாளை பிரான்சில் ‘கறுப்பு நாள்’ என்றே கூறப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு உயர்வு, ஆனால் அரச உதவி இல்லை, சம்பள உயர்வு இல்லை, பொது துறைகளில் ஆண் பெண் வேறுபாடுகள் இன்னும் தொடர்கிறது.

இவைகளை கண்டித்தே நாளை 13ம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடைபெறவுளளது.

SNCF போக்குவரத்து தொழிற்சங்கங்களான CGT-Cheminots, Sud-Rail, CFDT-Cheminots ஆகிய தொழில்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் SNCF தொடரூந்து சேவைகள் பாதிப்படையும் என அறியமுடிகிறது.

அதேபோல் ஓர்லி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளதால் நாளை 40% சதவீதத்திற்கும் அதிகமான சேவைகள் பாதிப்படையும். RATP பாரீஸ் மெற்றோ, பஸ் சேவைகள் பற்றிய விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. (தெரியவந்ததும் அறியத்தருகின்றோம்)

தேசிய ஆசிரியர்கள் சம்மேளனமும் நாளைய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளத்தால் écoles maternelles, élémentaires, collèges மற்றும் lycées போன்ற பாடசாலைகள் முடங்கும் நிலை ஏற்படும்.

தனியார் வைத்தியர்கள் ‘tarif des consultations’ மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான கட்டன உயர் கேட்டு நாளைமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மற்றைய வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் நாளை ஒரு நாள் மட்டும் நடக்கும், ஆனால் தனியார் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் தொடரும். ஆனால் மருத்துவமனைகள் வழமைபோல் இயங்கும்.

Exit mobile version