Site icon Tamil News

ரகசிய ஆவணங்கள் விவகாரம் : குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்,  அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக எழுந்து குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ‘அரசின் அணு ஆயுத திட்டங்கள் ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version