Tamil News

உயிரை காப்பாற்றிய விஜய்க்காக நாசரின் மகன் செய்த வேலை… பாராட்டும் பெற்றோர்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என்று தெரிவித்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நடிகர் நாசர் – கமீலா நாசர் தம்பதியின் மகன் பைசல் த.வெ.க.வில் உறுப்பினராக இணைந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

உடல்நலம் சரியில்லாத நிலையிலும் விஜய் கட்சியில் அவர் சேர்ந்திருக்கிறார். இது குறித்து அவரது தாய் கமீலா நாசர் பேசியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

”என்னுடைய பையன் சின்ன வயதில் இருந்தே விஜய் சாரோட வெறித்தனமான ரசிகன். சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு எங்களையே நினைவு இல்லாமல் இருந்த என் மகனுக்கு, விஜய் சார் மட்டும்தான் நினைவில் இருந்தார். அவன் குணமாக வேண்டும் என்பதற்காக விஜய் சார் எங்கள் வீட்டுக்கே வந்து பார்த்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்” என்று கமீலா நாசர் கூறியுள்ளார்.

மேலும், “இன்று அவன் மீண்டு வந்திருப்பதற்கு விஜய் சார் ஒரு முக்கியக் காரணம். இப்போது விஜய் சார் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கட்சியில் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்ததை என் மகன் பார்த்து இம்ப்ரஸ் ஆகிட்டான்.

உடனே, கட்சியில் சேர்ந்தே ஆகணும்னு உற்சாகத்தோடு சொன்னான். அவன் விருப்பத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவன் விருப்பம்தான் எங்கள் விருப்பம்” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

Exit mobile version