Site icon Tamil News

இலங்கை மக்களுக்கு நாமல் விடுத்துள்ள அழைப்பு

இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பது போல்,கொழுந்து, விவசாயிகளின் மிளகு மற்றும் பால் ஆகியவற்றிற்கு நியாயமான மற்றும் நிலையான விலையை வழங்க நாங்கள் தெளிவாக பாடுபடுவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

சிறு தேயிலை உரிமையாளர்களுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு திட்டத்துடன் வேலை செய்கிறோம்.

மேலும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், எனது அன்பான தாய் தந்தையரே, அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம்.

இக்கட்டான நேரத்தில், சவாலான காலக்கட்டத்தில், ஒரு குழுவுடன் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கை எடுத்தோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு முன்னால் புள்ளிடியிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லுமாறு நான் உங்களை அழைக்கின்றேன்” என்றார்.

Exit mobile version