Site icon Tamil News

முகேஷ் அம்பானியின் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளும் நாமல்

இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியில் திருமணத்தில் நாமல் ராஜபக்‌சவும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.

இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் நாளை 12 ஆம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் வைபவமாக நடைபெறவுள்ளது.

அதற்கமைய, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவும் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version