Site icon Tamil News

கென்யாவில் பரவும் மர்ம நோய்: காலவரையறையின்றி மூடப்பட்ட பாடசாலைகள்

கென்யாவில் மர்ம நோய் பரவிவரும் நிலையில், 90க்கும் அதிகமான பள்ளி மாணவர்களின் கால்களில் பக்கவாத அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

அதனால் பெரும்பாலான மாணவர்களால் நடக்க முடியவில்லை என்று சர்வேதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

St. Theresa’s Eregi பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாய் உள்ளூர் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

அந்தப் பள்ளி காகாமெகா (Kakamega) எனும் நகரில் அமைந்துள்ளது.

பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது . பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்தம், சிறுநீர் மாதிரிகளைச் சுகாதார அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

கென்யாவின் மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளது.அங்கு அந்த மர்ம நோய் குறித்து ஆராயப்படுகிறது.

மாணவர்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதைக் காட்டும் காணொளி ‘X’ தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version