Site icon Tamil News

நேபாளத்தில் மர்மநோய் பரவிவருகிறது – 300 பேர் பாதிப்பு!

நேபாளத்தின் கலிகோட்டில் 300க்கும் மேற்பட்ட மக்கள் மர்ம நோய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து கலிகோட் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள் திரண்டுள்ளனர். நோயின் தன்மையை அறிய அவர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

சுகாதார வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் மர்மமான நோயை விரைவாகக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான அவசியத்தை ஆராய்கிறது.

இந்த நோயின் அறிகுறிகளாக,  காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, அடிநா அழற்சி, முகத்தில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூறப்படுகிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளேயே அதிகம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version