Tamil News

அந்த 4 மணி நேரம் – ராதாரவி பற்றி மிஷ்கின் சொன்ன சீக்ரெட்

இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை.

அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகின்றார்.

பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில் பிசாசு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர்,

‘பிசாசு படத்தில் தந்தை கேரக்டரில் ராதாரவியை நடிக்க வைக்க முடிவு செய்தபோது நல்ல தந்தையாக அவர் நடிப்பாரா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். ஏன் நடிக்கக்கூடாதா என்று நான் கேட்டு நடிக்க வைத்தேன். அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சில நாட்கள் அவருக்கு டயலாக்கே இல்லை. தப்பான இடத்துக்கு வந்துவிட்டோமோ என்றுதான் யோசித்தார். ஆனால் போகப்போக புரிந்துகொண்டார். அதேபோல் ஒரு சீனுக்காக சுமார் நான்கு மணி நேரம் ஐஸில் படுத்துக்கிடந்தார்’ என்றார்.

Exit mobile version