Site icon Tamil News

துருக்கி நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட எம்பிக்கள் – இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கி நாட்டில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி – ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் தொழிலாளர் கட்சியின் (டிஐபி) எம்.பியான அஹ்மத் சிக், நாட்டின் அதிபரான எர்டோகன் தலைமையிலான ஏ.கே. கட்சியின் உறுப்பினர்களை அவமதித்ததில் இருந்து மோதல் தொடங்கியது. துருக்கி நாட்டில் ஆளும் கட்சியான ஏகேபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் சிக் உரையாற்றும்போது, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில், பிற உறுப்பினர்கள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.

கடந்த 2013ம் ஆண்டில் துருக்கி நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அரசை கவிழ்க்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அடலே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த விசாரணையில் 2022 ஆம் ஆண்டு 18 ஆண்டுகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

Brawl in Turkish parliament over ousted MP | National | elkharttruth.com

அடலே சிறையில் இருந்தாலும், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் துருக்கி தொழிலாளர் கட்சியை பிரதிநித்துவப்படுத்தி வந்த நிலையில், அதன் வாயிலாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் சிறை தண்டனை குற்றவாளி என அவரின் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அடலேவின் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே அவரை நாடாளுமன்ற அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இந்த விஷயம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியினரை தீவிரவாதிகள் என அழைத்தனர். ஆளும் கட்சியை “பயங்கரவாத அமைப்பு” என்று அழைத்த சிக், எதிர்கட்சியினரின் பேச்சை சுட்டிக்காட்டி பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், “உங்களின் பக்கம் நிற்காத நபர்களை தீவிரவாதிகள் என அழைப்பதைப்போல, அடலேவை நீங்கள் தீவிரவாதி என அழைப்பதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை” என தெரிவித்தார்.

பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களால், சிக் தரையில் தள்ளப்பட்டு பலமுறை குத்தப்பட்டார். இந்த மோதலின் போது இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காயமடைந்தனர். அதோடு, ஒரு பெண் உறுப்பினரும் தாக்கப்பட்டார். மோதல் வலுத்ததை அடுத்து சபாநாயகரின் மேடையில் ரத்தத் துளிகள் படிந்தன. இந்த சம்பவத்திற்கு பின்னர் சபாநாயகர் 3 மணிநேரம் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Exit mobile version