Site icon Tamil News

தற்காலிகமாக துறவறம் பூண்ட எம்.பியும், மகனும்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான குணதிலக்க ராஜபக்ஷவும் அவரது மகனும் இந்தியாவின் வாரணாசியில் உள்ள இசிபத்தனாராம மூல கந்தகுடி விகாரையில் தற்காலிக துறவற வாழ்க்கைக்கு செவ்வாய்க்கிழமை (20) பிரவேசித்துள்ளனர்.

குணதிலக்க ராஜபக்ஷ, ஹரிஸ்பத்வே தம்மரதன என்ற பெயரிலும், வணக்கத்துக்குரிய ரத்மலே சுமித் ஆனந்த மற்றும் வணக்கத்துக்குரிய தெஹியத்தகண்டி பியானந்த ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கனடாவில், வசிக்கும் பொறியியலாளர் சந்தகலும் ராஜபக்ஷ, அம்பாறை தம்மாலோக என்ற பெயரிலும் தற்காலிகமாக துறவற வாழ்க்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.

இருவரும் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதனாராம ஆலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.எம்.பி, தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துறவறம் நுழைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version