Site icon Tamil News

பெரும்பாலான ஆண்டிடிரஸன் மருந்துகள் நாள்பட்ட வலிக்கு வேலை செய்யாது : ஆய்வில் வெளியான தகவல்!

பெரும்பாலான ஆண்டிடிரஸன் மருந்துகள் நாள்பட்ட வலிக்கு வேலை செய்யாது என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு, ஆண்டிடிரஸன் மருந்துகள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இது குறித்து சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரான டாக்டர், ஹோலி பிர்கின்ஷா ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளார்.

இதில்,   ஃபைப்ரோமியால்ஜியா, நரம்பு நிலைகள் அல்லது தசைக்கூட்டு சேதம் ஆகியவற்றால் ஏற்படும் நாள்பட்ட வலியுடன் வாழும் மக்களுக்கு ஆண்டிடிரஸன் மருந்துகள்  வழங்கப்படுகின்றன.

அமிட்ரிப்டைலைன் மிகவும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அது செயல்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

“இது அமிட்ரிப்டைலைனை உள்ளடக்கியது, எனவே இது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான ஆண்டிடிரஸன்ட் என்றாலும், செயல்பாட்டு ரீதியில் அவை வேலை செய்யும் என்பது ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  Duloxetine விலை அதிகம் என்பதால், அது அமிட்ரிப்டைலைனை விட குறைவாகவே பரிந்துரைக்கப்படுவதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.

Exit mobile version