Site icon Tamil News

சேவையில் இருந்து அகற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன!

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேருந்துகள் திருத்தப்பட்டு மீண்டம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (24.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக உதிரி பாகங்கள் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அகற்றப்பட்ட பேருந்துகளே இவ்வாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 03 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேரூந்துகளில் 400 பேரூந்துகளை சீர்செய்யும் திட்டமொன்று பொது திறைசேரி ஏற்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த  திட்டத்தின்கீழ்  175 பேருந்துகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக  300 மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிநுட்பப் பிரிவின் பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் பங்களிப்புடன் உரிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version