Site icon Tamil News

ரஷ்யா – உக்ரைன் போரின் நடுவே மேலும் பல இலங்கையர்கள் பலி

ரஷ்ய உக்ரைன் போரின் கூலிப்படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகம், ஆட்கடத்தல் விசாரணைகள், கடல்சார் குற்றப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரண்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக இன்று (11) செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் 29ம் திகதி முதல் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியும் பதவிய பிரதேசத்தில் வசிப்பவருமான அசங்க சந்தனவும் ரஷ்யாவுக்காக போராடுவதற்காக பெப்ரவரி 12 ஆம் திகதி ரஷ்யாவிற்கு சென்றிருந்தார்.

மேலும் அவர் தனது கடைசி தொலைபேசி அழைப்பை மார்ச் 29 ஆம் திகதி தனது உறவினர்களுக்குச் செய்திருந்தார். அதன்பிறகு, அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையில், மெதவாச்சி வஹமல்கொல்லேவ பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற கமாண்டோ அதிகாரியான பிரதீப் சந்தன, பெப்ரவரி 12 ஆம் திகதி ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றதுடன், மார்ச் 29 ஆம் திகதி தனது கடைசி அழைப்பையும் மேற்கொண்டார்.

Exit mobile version