Tamil News

‘மூக்குத்தி அம்மன் 2′ படத்தை இயக்கும் சுந்தர்.சி – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் மூக்குத்தி அம்மன்.

இந்தப் படத்தில், நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் கடந்த 2020ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த இரண்டாம் பாகத்திலும், நயன்தாராவே நடிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தை இயக்குவது யார், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் எனும் விஷயங்கள் முடிவாகமால் இருந்தது. இந்நிலையில், சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்க உள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Exit mobile version