Site icon Tamil News

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தாது என அறிவிப்பு!

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாதன் ரஷ்யாவின் அடுத்த இலக்கு என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மால்டோவா இயற்கை எரிவாயு கொள்வனவில், ரஷ்யாவை தான் 100 வீதம் நம்பியுள்ளது.

இந்த சூழலில், புக்கரெஸ்டில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டோரின் ரீ சியன், மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அறிவித்தார்.

இது தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் ஐரோப்பிய ஆற்றல் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவின் இயற்கை எரிவாயு நுகர்வை புறக்கணித்துள்ளார்.

இதேவேளை மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக, ரஷ்யா கடந்த ஆண்டில் பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version