Site icon Tamil News

அயர்லாந்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி

அயர்லாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சைமன் ஹாரிஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தின் புதிய பிரதமராக சிமோன் ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார், அந்நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற சாதனையில் இணைந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது X கணக்கில் ஒரு பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அயர்லாந்தின் மிக இளவயது பிரதமரான சிமோன் ஹாரிஸுக்கு வாழ்த்துகள்.

ஜனநாயக விழுமியங்களில் பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளின் வரலாற்று உறவுகளை மதிப்பதாக” இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் அயர்லாந்தும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கூட்டாண்மையுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version