Site icon Tamil News

ஜெர்மனியில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் – ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜெர்மனி நாட்டில் உயர்தர பரீட்சசையில் தோற்றாமல் மாணவர்கள் பல்கலைகழகங்களில் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெர்மனிய மாணவர்கள் கா பொ த உயர்தர பரீட்சை எழுதும் ஆர்வத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜெர்மனியில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களில் கா பொ த உயர்தர என்று சொல்லப்படுகின்ற அபிடு என்று சொல்லப்படுகின்ற பரீட்சை செய்யாமலே பல்கலைகழகத்தில் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

2021 ஆம் ஆண்டு மொத்தமாக மாணவர்களின் 70 ஆயிரம் பேர் இவ்வாறு உயர் தர பரீட்சையில் தேற்றாமலே 3வது வழியாக பல்கலைகழகத்தில் புகுந்து தமது கற்கை நெறிகலை கற்று வருவதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது மொத்தமாக பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களில் இது 2.4 சதவீதமாக  உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில் 2011 ஆம் ஆண்டு இவ்வாறு பல்கலைகழகத்தில் உயர்தர பரீட்சையில் தேற்றாமலே கல்வி  கற்ற மாணவர்களின் தொகையானது 32200 ஆக இருந்துள்ளது.

தற்பொழுது ஜெர்மனியில் கிழக்கு மாநிலமான தியுரிங்களில் மொத்த பல்கலைகழக மாணவர்களில் 13.5 சதவீதமானவர்கள்  இவ்வாறு உயர் தர பரீட்சைக்கு சென்று அந்த பரீட்சையை செய்யாதவர்கள் என்றும் தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில் ஹம்பக் மாநிலத்தில் 5.1 சதவீதமாகவும் பிரேமன் மாநிலத்தில் இவ்வாறு அபிடு என்று சொல்லப்படுகின்ற உயர் தர பரீட்சை செய்யாதவர்களில் 4.9 சதவீதமானவர் பல்கலைகழகத்தில் கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

 

Exit mobile version