Site icon Tamil News

மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்திய ஈரான்!

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகள் மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணையை ஏவியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி போராளிகள் பெரும் விலை கொடுக்க நேரிடலாம் என்று கூறியுள்ளார்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் அந்த பிராந்தியத்தில் முதன்முறையாக இத்தகைய தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்தார். அந்த தூரத்தை கடக்க ஏவுகணை 11 1/2 நிமிடங்கள் எடுத்தது.

ஏவுகணையின் பாகங்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள பண்ணை ஒன்றில் விழுந்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹூதி போராளிகள் முதன்முறையாக இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இதற்கு பதிலடியாக கரைடா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

Exit mobile version