Site icon Tamil News

JN.1 புதிய கொவிட் ரகத்தை கவனித்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ள JN.1 புதிய கொவிட் ரகத்தை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கவனித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன கூறுகிறார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் இன்று (02.01) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இதுவரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் எந்த நோயாளர்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்டார்.

அப்படியிருந்தும், கடந்த கோவிட் பருவத்தில் பின்பற்றப்பட்ட முறையான சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.

மேலும், நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான நோய்த்தடுப்பு தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திரு.ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

Exit mobile version