Site icon Tamil News

கோப் குழு மீது அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும் அந்த குழுவே ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், நேற்றைய தினம் கிரிக்கெட் அதிகாரிகளை கோப் குழு முன்னிலையில் அழைத்த போது, ​​தேவையான கேள்விகளுக்கு பதிலாக, தேவையற்ற விடயங்களையே கோப் உறுப்பினர்கள் வினவியதாக குறிப்பிட்டார்.

“கோப் குழுவும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விற்கப்பட்டதா? என தனக்கு சந்தேகம் நிலவுதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version