Site icon Tamil News

இலங்கையில் இலட்சக்கணக்கான நிர்வாண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன!

கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இணைய பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதம் இன்று (23.01) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இந்த ஆண்டின் முதல் சில வாரங்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு 6,690 இணையம் ஊடாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளன.

இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியிடம் முறைப்பாடு வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. இன்னும் பல இணைய குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version