Site icon Tamil News

இந்த நாடு எப்போதோ முன்னேற்றம் அடைந்திருக்கும் : வரிவிதிப்பு தொடர்பில் சிறிதரன் குற்றச்சாட்டு!

வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி ஒத்துழைப்புக்கு அனுமதி கிடைத்தவுடன்  ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்து  கொண்டாடும் நிலை காணப்படுகிறது.

ஆனால் நாடு 54 பில்லியன் டொலர் கடனாளியாக உள்ளது. நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக  உள்ளோம். பொருளாதார பாதிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் சுதந்திரமாக  நிம்மதியாக வாழும் சூழல் இந்த மண்ணில் உள்ளதா?  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இதுவரையில் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் அவதானம் செலுத்தவில்லைஇசிறந்த தலைவரை இந்த நாடு தெரிவு செய்யவில்லை.

வரி விதிப்பு ஊடாக நாடு முன்னேற்றமடையும் என்றால் இந்த நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும்,  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி விதிக்கப்படுகிறதுஇஇதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version